மகாலக்ஷ்மி
ஸ்ரீ மஹாலஷ்மி தோன்றிய கதை ! ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மியின் கதையை படிப்பவர்களுக்கு வீடுகளில் லஷ்மி கடாஷம் நிரந்தரமாகும். மும்மூர்த்திகளில் ஒருவரான மஹா விஷ்ணுவின் துணைவியாக இருக்கும் செல்வத்திற்கான கடவுள் மஹாலட்சுமி எப்படி தோன்றினாள். லட்சுமி தேவியை மஹாவிஷ்ணு மணந்த புராண கதை. முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும், மனிதர்களைப் போல நரை, திரை, பிறப்பு இறப்பு, ஆகியவை இருந்திருகின்றன. இதிலிருந்து தேவர்கள் விடுபட வேண்டும் என நினைத்தார்கள். தேவர்களின் தலைவராகிய இந்திரன் அதிலிருந்து விடுபட வேண்டி ப்ரம்மனிடம் சிவபெருமானிடமும் முறையிட்டனர். ஆனால் அவர்களோ மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டால் அதற்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார். *பாற்கடல் கடைதல்* ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் முறையிட்ட போது, கவலைப் பட வேண்டாம். இந்த பாற்கடலில் அமிர்தம் இருக்கின்றது. நாம் இந்த பாற்கடைலை கடைந்தால் அதைப் பெற முடியும் என்றார். அந்த அமிர்தத்தை அருந்தினால் நாம் நரை, திரை, பிறப்பு இறப்பு, ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும். இதையடுத்து ஆலோசனை நடந்தது. தேவர்கள் மட்டும் பாற்கடல...