Posts

Showing posts from October, 2023

Lagnam Raashi லக்கனம் ராசி

எந்த லக்கினமாக இருந்தாலும் லக்னாதிபதி எட்டில் நிற்க ஒருவர் பிறந்து இருந்தால் அவர் அழிச்சாட்டியம் செய்பவராக இருப்பார். எந்த லக்னமாக இருந்தாலும் லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் செவ்வாய் ராகு சேர்ந்திருந்தால் , அவர்களுக்கு விஷத்தால் மரணம் அடையக் கூடிய சூழ்நிலை உண்டாகும். அந்த எட்டாம் இடத்தை குரு பார்த்தால் உயிருக்கு சமமான கண்டம் உண்டாகி அதிலிருந்து மீண்டு விடுவார்கள். லக்னாதிபதி அல்லது ஐந்தாம் இடத்தின் அதிபதி நீசமாக இருந்தால் அல்லது ராகு உடன் சேர்ந்து இருந்தால் அல்லது கேதுடன் சேர்ந்து இருந்தால் அவர்கள் வினோதமான குணங்களுடன் இருப்பார்கள். லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் அதிபதி ராகு அல்லது கேது உடன் சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு   முதல் திருமண வாழ்க்கை நன்றாக இருக்காது. நாம் வாழ்ந்து வரும் காலகட்டத்தில் இப்படிப்பட்ட கிரக அமைப்பு உள்ளவர்கள் ஒரு காதல் தோல்விக்கு பிறகு திருமணம் செய்தால் அவர்களுக்கு திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்பது 25 ஆண்டுகள்   அனுபவத்தில் கண்டுபிடித்த உண்மை. செவ்வாய் ஆட்சியாகி அதே ராசியில் கேது உச்சமாகி அது லக்னத்திற்கு திரிகோண ராசியாக இருந்தால் அவர்...