பூச்சொரிதல்
பூச்சொரிதல் ஸ்பெஷல் ! 🍁🌸🍁🌸🍁🌸🍁🌸🍁 மாரியம்மன் சுப்ரபாதம் ! 🌿🌻🌿🌻🌿🌻🌿🌻🌿 சமயபுரம் கண்ட சத்திய ஜோதியாம் மகமாயி ! சகல நன்மைகளின் அருட்சுடர் நாயகியே ! முழுமதியாக எங்குமே தவழ்ந்து நீயும் முல்லை மணமாக எங்கள் வாழ்வு ஆகிட நீயும் பள்ளி எழுந்தருள்வாய் ! தாயே ஸ்ரீ சமயபுரம் மகமாயி ! 🌈🌷🌈🌷🌈🌷🌈🌷🌈 தேவி பாத கமலம் சரணம் ! ➖➖➖➖➖➖➖➖➖ 🪴🌟🪴🌟🪴🌟🪴🌟🪴 புஷ்பாஞ்சலி ! 1. ரோஜாப்பூ கொண்டு வந்தே எங்கள் ராஜேஸ்வரியே பூஜை செய்தால் தேசாதி தேசம் மெச்சும் ஒரு ராஜாப்போல வாழச் செய்வாள் 2. முல்லைப்பூ கொண்டு வந்தே எங்கள் மோகனாங்கியை பூஜை செய்தால் இல்லை என்று சொல்லாமலே அவள் அள்ளி அள்ளி அளித்திடுவாள் 3. மருக்கொழுந்து கொண்டு வந்தே எங்கள் மனோன் மணியை பூஜை செய்தால் திருக்கோலம் கொண்டு அங்கே அவள் தினந்தோறும் வந்திடுவாள் 4. ஜாதிப்பூ கொண்டு வந்தே எங்கள் ஜோதி அவளை பூஜை செய்தால் ஓதி உணரா வித்தையெல்லாம் தந்து மேதை என்றாக்கி விடுவாள் 5. மகிழம்பூ கொண்டு வந்தே எங்கள் மாதங்கியை பூஜை செய்தால் மணமாகாத கன்னியர்க்கு திருமணம் அவள் நடத்தி வைப்பாள். 6. தாழம்பூ கொண்டு வந்தே எங்கள் தாட்சாயணியை பூஜை செய்தால் ...