பூச்சொரிதல்

பூச்சொரிதல் ஸ்பெஷல் !

🍁🌸🍁🌸🍁🌸🍁🌸🍁

மாரியம்மன் சுப்ரபாதம் !

🌿🌻🌿🌻🌿🌻🌿🌻🌿

சமயபுரம் கண்ட சத்திய ஜோதியாம் மகமாயி ! 

சகல நன்மைகளின் அருட்சுடர் நாயகியே !

முழுமதியாக எங்குமே தவழ்ந்து நீயும் 

முல்லை மணமாக எங்கள் வாழ்வு ஆகிட நீயும் 

பள்ளி எழுந்தருள்வாய் ! தாயே ஸ்ரீ சமயபுரம் மகமாயி !

🌈🌷🌈🌷🌈🌷🌈🌷🌈


தேவி பாத கமலம் சரணம் !

➖➖➖➖➖➖➖➖➖

🪴🌟🪴🌟🪴🌟🪴🌟🪴

புஷ்பாஞ்சலி !

1. ரோஜாப்பூ கொண்டு வந்தே எங்கள்

ராஜேஸ்வரியே பூஜை செய்தால்

தேசாதி தேசம் மெச்சும் ஒரு

ராஜாப்போல வாழச் செய்வாள்


2. முல்லைப்பூ கொண்டு வந்தே எங்கள்

மோகனாங்கியை பூஜை செய்தால்

இல்லை என்று சொல்லாமலே அவள்

அள்ளி அள்ளி அளித்திடுவாள்


3. மருக்கொழுந்து கொண்டு வந்தே எங்கள்

மனோன் மணியை பூஜை செய்தால்

திருக்கோலம் கொண்டு அங்கே

அவள் தினந்தோறும் வந்திடுவாள்


4. ஜாதிப்பூ கொண்டு வந்தே எங்கள்

ஜோதி அவளை பூஜை செய்தால்

ஓதி உணரா வித்தையெல்லாம் தந்து

மேதை என்றாக்கி விடுவாள்


5. மகிழம்பூ கொண்டு வந்தே எங்கள்

மாதங்கியை பூஜை செய்தால்

மணமாகாத கன்னியர்க்கு திருமணம்

அவள் நடத்தி வைப்பாள்.


6. தாழம்பூ கொண்டு வந்தே எங்கள்

தாட்சாயணியை பூஜை செய்தால்

வாழாப் பெண்ணை நாதனுடன் அவள்

சேர்த்து வாழவைப்பாள்


7. பத்ரம் பல கொண்டு வந்தே எங்கள்

பகவதியை பூஜை செய்தால்

சித்திரைப் போல உள்ளவர்க்கு அவள்

புத்ர பாக்கியம் செய்திடுவாள்


8. தாமரைப்பூ கொண்டு வந்தே எங்கள்

ஷியாமளியை பூஜை செய்தால்

தாமதம் செய்யாமலே அவள்

தாலிப் பிச்சை தந்திடுவாள்


9. மல்லிகைப்பூ கொண்டு வந்தே எங்கள்

மஹேஸ்வரியை பூஜை செய்தால்

பில்லி சூன்யம் ஏவல் எல்லாம்

அவள் பின்னாலே ஓடச்செய்வாள்


10. செண்பகப்பூ கொண்டு வந்தே எங்கள்

அம்பிகையை பூஜை செய்தால்

ஜென்மாந்திர பாவமெல்லாம் அவள்

தீர்த்து விளக்கி ஓட்டிடுவாள்


11. பாரிஜாதம் கொண்டு வந்தே எங்கள்

பார்வதியை பூஜை செய்தால்

பால ரூபம் கொண்டுமே நம்

பாவமெல்லாம் போக்கிடுவாள்


12. அரளிப்பூ கொண்டு வந்தே எங்கள்

அபிராமியை பூஜை செய்தால்

அளவில்லாத செல்வத்தை அவள்

அகமகிழ தந்திடுவாள்


13. செம்பரத்தை கொண்டு வந்தே எங்கள்

சண்டிகையை பூஜை செய்தால்

தந்திரமாய் நம் கனவில் வந்து

அவள் அந்தரங்கம் சொல்லிடுவாள்


14. மாதுளம்பூ கொண்டு வந்தே எங்கள்

மாதாவை பூஜை செய்தால்

மங்கள வாழ்வு தந்து அவள்

மனமகிழச் செய்திடுவாள்


15. மருதாணிப்பூ கொண்டு வந்தே எங்கள்

மீனாட்சியை பூஜை செய்தால்

மாறாத மனத்துடன் பக்தி

பாடல்கள் பாடச் செய்வாள்


16. பத்திரிப்பூ கொண்டு வந்தே எங்கள்

திரௌபதியை பூஜை செய்தால்

அருள்கூர்ந்து நம்முள்ளே அவள்

அனுக்ரஹம் செய்திடுவாள்


17. நீலாம்பரம் கொண்டு வந்தே எங்கள்

நீலாயதாட்சியை பூஜை செய்தால்

நித்யானந்தம் கொண்டுமே உலகில்

நித்யவாசம் செய்திடுவாள்


18. மனோரஞ்சிதம் கொண்டு வந்தே எங்கள்

மாலினியை பூஜை செய்தால்

சுகமான ஸுகந்தமுடன் அவள்

அவள் மனம் போல வீசச் செய்வாள்


19. சம்பங்கிப்பூ கொண்டு வந்தே எங்கள்

சர்வேஸ்வரியை பூஜை செய்தால்

சகல சௌபாக்கியம் தந்து அவள்

சஞ்சலத்தை நீக்கிடுவாள்


20. சாமந்திப்பூ கொண்டு வந்தே எங்கள்

சங்கரியை பூஜை செய்தால்

சத்தியமாய் வாழ்வினிலே அவள்

சந்தோஷத்தை அளித்திடுவாள்


21. தும்பைப்பூ கொண்டு வந்தே எங்கள்

துர்க்கையை பூஜை செய்தால்

தரித்திரத்தை துரத்தி அவள்

தனதான்யம் பொழிந்திடுவாள்


22. மந்தாரப்பூ கொண்டு வந்தே எங்கள்

லலிதாம்பிகையே பூஜை செய்தால்

பந்த பாசம் ஆசை நீக்கி அவள்

வந்தனங்கள் செய்திடுவாள்


23. வெட்டி வேர் கொண்டு வந்தே எங்கள்

புவனேஸ்வரியை பூஜை செய்தால்

மட்டில்லாத மகிழ்ச்சியுடன் அவள்

கட்டாயமாய் கிட்டிடுவாள்


24. கதிர்ப்பச்சை கொண்டு வந்தே எங்கள்

காமாட்சியை பூஜை செய்தால்

கடைக்கண்ணால் கடாட்சிக்க ஜன்மம்

கடைத்தேற செய்திடுவாள்


25. கருமாரி சாம்பல் பெற்றால்

கண்ட பிணி ஓடிவிடும்

இடைஞ்சல்கள் மாறி இன்பம்

இல்லத்தை நாடிவரும்.


ஓம் சக்தி ! பராசக்தி !


 
காமாட்சி 108 போற்றி


மாங்காட்டில் வாழ்பவளே     காமாட்சி! போற்றி

மகிமையுள்ள தெய்வம் நீயே  காமாட்சி! போற்றி

பஞ்சாக்நி மத்தியிலே     காமாட்சி! போற்றி

பரமனுக்குத் தவமிருந்த     காமாட்சி! போற்றி

காஞ்சியிலே கோயில்கொண்ட     காமாட்சி! போற்றி

கல்யாணக் கோலம்பூண்டாய்     காமாட்சி! போற்றி

சங்கரரும் பூஜை செய்த     காமாட்சி! போற்றி

சக்கரத்தில் உறைந்திட்ட     காமாட்சி! போற்றி

அர்த்தமேரு அலங்கரிக்கும்     காமாட்சி! போற்றி

அண்டி னோரைக் காக்கின்ற     காமாட்சி! போற்றி

காஞ்சிமுனி சேவிக்கும்     காமாட்சி! போற்றி

கண்கண்ட தெய்வமம்மா     காமாட்சி! போற்றி

பஞ்சலோக வடிவினியே     காமாட்சி! போற்றி

பக்தர் துயர் தீர்த்திடுவாய்     காமாட்சி! போற்றி

ஆடிப்பூர தினத்தினிலே     காமாட்சி! போற்றி

ஆனந்தமாய் வீற்றிருப்பாய்     காமாட்சி! போற்றி

பங்குனிநல் உத்திரத்தில்     காமாட்சி! போற்றி

பரமனைநீ மணங்கொண்டாய்     காமாட்சி! போற்றி

கரும்போடு காட்சிதரும்     காமாட்சி! போற்றி

கருணையுள்ள தெய்வம் நீயே     காமாட்சி! போற்றி

கிளியோடு காட்சிதரும்     காமாட்சி! போற்றி

கிருபைநீயும் செய்திடுவாய்     காமாட்சி! போற்றி

சாந்தமாக காட்சி தரும்     காமாட்சி! போற்றி

சந்தானம் தந்திடுவாய்     காமாட்சி! போற்றி

சூதவனம் கோவில் கொண்ட     காமாட்சி! போற்றி

சூதுகளை அகற்றிடுவாய்     காமாட்சி! போற்றி

இடப்புறத்தில் அமர்ந்திட்ட     காமாட்சி! போற்றி

இன்பமெல்லாம் தந்திடுவாய்     காமாட்சி! போற்றி

ஆறுவாரப் பூஜை ஏற்பாய்     காமாட்சி! போற்றி

ஆதிகாமாட்சியும் நீயே     காமாட்சி! போற்றி

முதல்வாரப் பூஜையிலே     காமாட்சி! போற்றி

நம்குறைகள் அறிந்திடுவாள்     காமாட்சி! போற்றி

இரண்டாம்வாரப் பூஜையிலே     காமாட்சி! போற்றி

இன்னல்களைப் போக்கிடுவாள்     காமாட்சி! போற்றி

மூன்றாம்வாரப் பூஜையிலே     காமாட்சி! போற்றி

மூன்றுவரம் தந்திடுவாள்     காமாட்சி! போற்றி

நான்காம் வாரப் பூஜையிலே     காமாட்சி! போற்றி

நலன்கள்பல தந்திடுவாள்     காமாட்சி! போற்றி

ஐந்தாம்வாரப் பூஜையிலே     காமாட்சி! போற்றி

ஐயங்களைப் போக்கிடுவாள்     காமாட்சி! போற்றி

ஆறாம்வாரப் பூஜையிலே     காமாட்சி! போற்றி

நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள்     காமாட்சி! போற்றி

மாவடியில் வசித்தவளே     காமாட்சி! போற்றி

மனக்குறைகள் தீர்த்திடுவாள்     காமாட்சி!

தாம்பூலம் ஏற்றிடுவாள்     காமாட்சி! போற்றி

தாயாகக் காத்திடுவாள்     காமாட்சி! போற்றி

கற்பூரம் ஏற்றிடுவேன்     காமாட்சி! போற்றி

கலிதெய்வம் நீதானே     காமாட்சி! போற்றி

புஷ்பமாலை ஏற்றிடுவாள்     காமாட்சி! போற்றி

புண்ணியங்கள் தந்திடுவாள்     காமாட்சி! போற்றி

காய்ச்சிட்ட பாலுடனே     காமாட்சி! போற்றி

கற்கண்டும் ஏற்றிடுவாள்     காமாட்சி! போற்றி

ஏலக்காய் தேனுடனே     காமாட்சி! போற்றி

ஏழைகளின் துயர் தீர்ப்பாய்     காமாட்சி! போற்றி

எலுமிச்சம் பழம் ஏற்பாள்     காமாட்சி! போற்றி

எம்குறைகள் தீர்த்திடுவாள்     காமாட்சி! போற்றி

மாலையாக காட்சிதரும்     காமாட்சி! போற்றி

பாசமுடன் காத்திடுவாள்     காமாட்சி! போற்றி

மங்களமாய் காட்சி தரும்     காமாட்சி! போற்றி

மங்களமாய் வாழவைப்பாள்     காமாட்சி! போற்றி

உத்யோகம் தந்திடுவாள்     காமாட்சி! போற்றி

உன்னடியே சரணமம்மா     காமாட்சி! போற்றி

அன்னை உனை வேண்டி நின்றேன்     காமாட்சி! போற்றி

ஆதரிப்பாய் என்னையும் நீ     காமாட்சி! போற்றி

மாங்கல்யம் தந்திடுவாள்     காமாட்சி! போற்றி

மக்களையும் காத்திடுவாள்     காமாட்சி! போற்றி

மணாளனைத் தந்திடுவாள்     காமாட்சி! போற்றி

மழலைகளும் தந்திடுவாள்     காமாட்சி! போற்றி

தூளிகளை ஏற்றிடுவாள்     காமாட்சி! போற்றி

துன்பங்களைத் துடைத்திடுவாள்     காமாட்சி! போற்றி

வெற்றிகளைத் தந்திடுவாள்     காமாட்சி! போற்றி

வேதனைகள் போக்கிடுவாள்     காமாட்சி! போற்றி

வேழமுகம் நாயகன் தாய்     காமாட்சி! போற்றி

வேல்முருகன் அன்னையும் நீ     காமாட்சி! போற்றி

குருநாதர் காட்டிட்ட     காமாட்சி! போற்றி

குவலயத்தோர் கொண்டாடும்     காமாட்சி! போற்றி

அகிலாண்ட நாயகியே     காமாட்சி! போற்றி

அன்பர்குறை தீர்த்திடுவாள்     காமாட்சி! போற்றி

ஆவின்பால் குடித்தவளே     காமாட்சி! போற்றி

ஆனந்தம் தந்திடுவாள்     காமாட்சி! போற்றி

சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்     காமாட்சி! போற்றி

சீக்கிரமே அருள்தருவாய்     காமாட்சி! போற்றி

கெஞ்சுகிறேன் உன்னையம்மா     காமாட்சி! போற்றி

கீர்த்தியுடன் வாழவைப்பாய்     காமாட்சி! போற்றி

கரம்கூப்பி வணங்குகிறேன்     காமாட்சி! போற்றி

வரம் அனைத்தும் தந்திடுவாய்     காமாட்சி! போற்றி போற்றி

நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள் காமாட்சி! போற்றி

நீதிகளைத் தந்திடுவாள்     காமாட்சி! போற்றி

வறுமைகளை ஓட்டிடுவாள்     காமாட்சி! போற்றி

வாழ்வுதந்து காத்திடுவாள்     காமாட்சி! போற்றி

அர்ச்சனைகள் ஏற்றிடுவாள்     காமாட்சி! போற்றி

அகத்தினிலே குடியிருப்பாள்     காமாட்சி! போற்றி

குழந்தை நானும் மனம் மகிழ     காமாட்சி! போற்றி

குமரனுடன் காட்சி தாராய்     காமாட்சி! போற்றி

அன்னை தந்தை தெய்வம் நீயே     காமாட்சி! போற்றி

அருள்வடிவாம் குருநீயே     காமாட்சி! போற்றி

மடிசாரில் காட்சிதரும்     காமாட்சி! போற்றி

மனவினைகள் தீர்த்திடுவாள்     காமாட்சி! போற்றி

கடும்தபசு புரிந்திட்ட     காமாட்சி! போற்றி

கவலைகளைக் களைந்திடுவாள்     காமாட்சி! போற்றி

காமகோடி ஈஸ்வரியே     காமாட்சி! போற்றி

காத்திருந்து வரமளிப்பாய்     காமாட்சி! போற்றி

காஞ்சிமுனி வேண்டிநிற்கும்     காமாட்சி! போற்றி

காலமெல்லாம் காத்தருள்வாய் காமாட்சி! போற்றி


கடைசியில் போற்றி என சேர்த்துக் கொள்ளவும்



Comments

Popular posts from this blog

60 names of years

கந்த சஷ்டி விரதம்