புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ! இது கவியரசர் எழுதிய ஒரு அற்புதமான பக்திப் பாடல் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! இந்தப் பாடலுக்கான ஒரு விளக்க உரையாக எனக்கு வாட்ஸாப்பில் வந்த ஒரு கட்டுரையை நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இப்படி ஒரு அற்புதமான விளக்கவுரை தந்திருக்கும் அந்தப் பெயர் தெரியாத நண்பருக்கு எனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையிலேயே ஒரு அற்புதமான விளக்கத்தை அவர் கொடுத்திருக்கிறார். "கவியரசர் கண்ணதாசன் இயற்றி, அமரர் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்ற பாடலை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. மெல்லிசை மன்னர் இசையமைத்த, இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. இந்தப்பாடலைக் கவியரசர் அமைத்திருக்கும் முறையை சற்று ஆராய்ந்தால் பல சுவாரஸ்யமான தகவல்கள், கதைகள் நமக்கு கிடைக்கும். நாம் சர்வசாதாரணமாக கேட்டுக்கொண்டே கடக்கும் ஒரு பாடலுக்குள் எத்தனை எத்தனை விஷயங்கள். எங்கும் அவநம்பிக்கைகளும், அச்சங்களும், எதிர்மறை எண்ணங்களும் சூழ்ந்திருக்கும் ஒரு சூழலில் இறைவனின் அருள்தன்ம...