Posts

Showing posts with the label Dheepalakshmi

தீபலக்ஷ்மி Dheepalakshmi

தீப லட்சுமியை துதிப்போம். தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:  தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன். 2. சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத:  சத்ரு புத்தி வினாசாய தீபஜோதி நமோஸ்துதே எல்லா சுபகாரியங்களும் தடையின்றி நடக்கவும், எதிரிபயம் விலகவும் உடல்நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும் அருள்புரியும் தீபலட்சுமியே… எங்கள் அறிவாற்றல் இருள் இன்றிப் பிரகாசிக்கவும் அருள்செய்யும் உன்னைத் துதிக்கிறேன். 3. ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ  ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ  கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ  விபூதி வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ எவரால் தினமும் தீபம் ஏற்றப்படுகிறதோ அவரது இல்லத்தில், பொன், பொருள் சேரும். தானியங்கள் குறைவிலாது பெருகும்; அன்னப் பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். சகல ...