Posts

Showing posts with the label ஆன்மா

ஆன்மா

ஆன்மா https://www.youtube.com/results?search_query=%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE   ஆன்மாவை அறிதல், ஆன்மாவை அடைதல், ஆன்ம அனுபூதி என்றெல்லாம் சொல்வதன் பொருள் என்ன என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது. ப்ரதிபோதவிதிதம் மதமம்ருதத்வம் ஹி விந்ததே I ஆத்மனா விந்ததே வீர்யம் வித்யயா விந்தேம்ருதம் II 4 II பொருள்: உணர்வின் ஒவ்வொரு நிலையிலும் ஆன்மாவை அறிபவனே உண்மையில் அறிகிறான் என்பது கருத்து. அப்படி அறிந்தவன் நிச்சயமாக மரணமிலாப் பெருநிலையை அடைகிறான். ஆன்மாவிலிருந்து ஆற்றல் கிடைக்கிறது. ஞானத்தால் மரணமிலாப் பெருநிலை அறியப்படுகிறது. உடம்பு, மனம், ஆன்மா என்று பலவற்றால் அமைந்த தொகுதி மனிதன். ஆன்மா மட்டுமே உணர்வுப் பொருள்; மற்ற அனைத்தும் உணர்வற்றவை. தீக்குள் இடப்பட்ட இரும்பு தீ போலவே ஜொலிக்கிறது. அந்த இரும்பின் ஒளியும் சூடும் உண்மையில் அதற்கு உரியவை அல்ல. தீயின் தொடர்பால், இரும்பு தீ போல தெரிகிறது. அதுபோலவே ஆன்மா என்ற உணர்வுப் பொருளின் தொடர்பால் உடம்பு, மனம் போன்றவை உணர்வுப் பொருள் போலத் தோன்றுகின்றன. உணர்வின் ஒவ்வொரு நிலையிலும் ஆன்ம உணர்வு உணரப்பட வேண்டும் என்கிறது மந்திரம். அதாவது...