சிவராத்திரி
https://www.youtube.com/watch?v=Bz-f0y2m-CU https://www.youtube.com/watch?v=HY1nf5Z6j4w https://www.youtube.com/watch?v=O27tY0XSqm4 சிவராத்திரியின் சிறப்புகள் பற்றி : கண் விழித்தல் என்றால் உறங்காமல் இருத்தல் என்று மட்டும் பொருளல்ல. உறங்காமல் இருத்தல் என்றால் என்ன பொருள் தெரியுமா ? அகக்கண் விழித்தல். உள்ளே அகம் விழித்திருக்க வேண்டும். “ தனித்திரு, விழித்திரு, பசித்திரு “ பசித்திரு என்றால் உணவு உண்ணாமல் இருப்பது மட்டுமல்ல. ஆன்மீகத்தில் சென்று ஞான நிலையை, அந்த உச்சாணி நிலையை அடையவேண்டும் என்ற பசியைதான் குறிக்கிறது. எனவே விழித்திருத்தல் என்றால் விழிப்புணர்வோடு இருத்தல். மாயையில் சிக்காமல் இருத்தல். பாசங்களில், பற்றுகளில் மாட்டிக்கொள்ளாமல் இருத்தல். ஆசாபாசங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருத்தல். இதை தவிர வெறும் கண்ணை மூடி சயனத்திலே படுத்து உறங்காமல் இருந்தால் மட்டும் இறையருள் கிட்டிவிடாது. எனவே விழித்தல் என்றால் அனைத்திலும் எச்சரிக்கையாக, எந்த மாயையிலும் சிக்கிவிடாமல் இருப்பதற்குண்டான ஒரு பயிற்சி, ஒரு முயற்சிதான் இதுபோன்ற பூஜ...