Lagnam Raashi லக்கனம் ராசி

எந்த லக்கினமாக இருந்தாலும் லக்னாதிபதி எட்டில் நிற்க ஒருவர் பிறந்து இருந்தால் அவர் அழிச்சாட்டியம் செய்பவராக இருப்பார்.

எந்த லக்னமாக இருந்தாலும்

லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் செவ்வாய் ராகு சேர்ந்திருந்தால், அவர்களுக்கு விஷத்தால் மரணம் அடையக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.

அந்த எட்டாம் இடத்தை குரு பார்த்தால் உயிருக்கு சமமான கண்டம் உண்டாகி அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.

லக்னாதிபதி அல்லது ஐந்தாம் இடத்தின் அதிபதி நீசமாக இருந்தால் அல்லது ராகு உடன் சேர்ந்து இருந்தால் அல்லது கேதுடன் சேர்ந்து இருந்தால் அவர்கள் வினோதமான குணங்களுடன் இருப்பார்கள்.

லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் அதிபதி ராகு அல்லது கேது உடன் சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு  முதல் திருமண வாழ்க்கை நன்றாக இருக்காது.

நாம் வாழ்ந்து வரும் காலகட்டத்தில் இப்படிப்பட்ட கிரக அமைப்பு உள்ளவர்கள் ஒரு காதல் தோல்விக்கு பிறகு திருமணம் செய்தால் அவர்களுக்கு திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்பது 25 ஆண்டுகள்  அனுபவத்தில் கண்டுபிடித்த உண்மை.

செவ்வாய் ஆட்சியாகி அதே ராசியில் கேது உச்சமாகி அது லக்னத்திற்கு திரிகோண ராசியாக இருந்தால் அவர்கள் சூட்சுமமாக வேறு உலகங்களுக்கு அடிக்கடி பயணம் செய்யும் ஆத்மாவாக இருப்பார்.

கும்ப லக்னமாகி லக்கனம் அல்லது இரண்டாம் இடத்தில் குரு இருக்க பிறந்தவர்கள் சித்தர் ஒருவரின் நேரடி வழிகாட்டுதல் மூலமாக பல ஆன்மீக ரகசியங்களை வாழ்நாள் முழுவதும் பெற்றுக் கொண்டே இருப்பார்கள்.

 

 

ஒவ்வொரு யுகத்தின் முதல் நாள் அன்றும் முதல் ராசியான மேஷ ராசியில் முதல் நட்சத்திரமான அசுபதியில் முதல் பாகமான அசுபதி ஒன்னாம் பாதத்தில் ராகுவை தவிர 8 கிரகங்கள் ஒன்று சேர்ந்து நிற்கும்.

இந்த ஒரே ஒரு கருத்தை மட்டும் எந்த ஒரு ஜோதிடரிடமும் தெரிவிக்காமல் உங்கள் மனதுக்குள் வைத்துக் கொள்ளவும் .

மற்ற ஜோதிடர்கள் உங்களுடைய ஜோதிட திறமையை கேலி செய்தால் இந்த கேள்வியை கேளுங்கள்.

 ஒவ்வொரு யுகத்தின் முதல் நாள் அன்றும் கிரகங்கள் எப்படி இருக்கும்? என்று கேளுங்கள்.

 இதற்கு யாராலும் பதில் சொல்ல முடியாது.

 அதே சமயம் எனக்கும் தெரியாது என்று கூறி விடுங்கள்.

 ஏனென்றால் உங்கள் தொழில் மீது மரியாதை தரக்கூடிய கேள்வி இது.

 நீங்கள் பதிலை சொல்லிவிட்டால் இதை அவர்கள் ஊர் முழுக்க பரப்பி கொண்டே இருப்பார்கள்.

 உங்களைப் பற்றிய உயர்ந்த மரியாதை குறைந்துவிடும்.

ஒரே நட்சத்திர பாதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அதற்கு கிரக யுத்தம் என்று பெயர்.

 கிரக யுத்தத்தில் உள்ள கிரகத்தில் வென்ற கிரகமும் நன்மை தராது தோற்ற கிரகமும் நன்மை தராது.

ஜோதிடர்களுடைய கடவுள் காலபைரவர் ஆவார் .

எட்டு பைரவ உலகங்கள் உள்ளன.

 பைரவ  சித்தர்கள் உண்டு.

 அதில் ஸ்ரீ வாரதாரக சித்தர் என்பவர் தான் நாம் வாழ்ந்து வரும் பூமிக்குரிய பைரவர் ஆவார்.

 எனவே தினமும் ஓம் ஹ்ரீம் ஸ்ரீ வாரதாரக சித்தகுரு நம ஸ்வாஹா என்று ஒவ்வொரு ஜோதிடரும் தினமும் ஒரு முறையாவது காலையில் தூங்கி எழுந்ததும் அவரை நினைத்து ஜெபிக்க வேண்டும்.

கல்யாண பொருத்தம் பார்க்கும் போது நம்மிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் பொருத்தம் இல்லை என்று மட்டும் கூற வேண்டும். இப்படி சொன்னால் மட்டுமே நமக்கு கர்மவினை சேராது எதனால் பொருத்தம் இல்லை என்ற விளக்கத்தை சொன்னால் அது மற்றவர்களுக்கு அதாவது நம்மிடம் பொருத்தம் பார்க்க வந்த தம்பதியரின் எதிராளிக்கு தெரிந்து விடும் .இதனால் மனக்கசப்பு உண்டாகும்.

ஆவிகள் உலகம் என்ற மாத இதழ் மாதம்தோறும் வாங்கி வாசித்துக் கொண்டே இருங்கள் .

இதன் மூலமாக கர்மவினை பற்றி பல்வேறு தெய்வீக ரகசியங்கள் நமக்கு அடிக்கடி கிடைக்கும்.

தெற்கு நோக்கி துணி துவைக்க கூடாது.

 தெற்கு நோக்கி சாப்பிடக் கூடாது.

 தெற்கே தலை வைத்து தூங்க கூடாது .

தெற்கு  திசை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது.

 இதில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் தேவையில்லாத அவமானங்கள் தேடி வந்து கொண்டே இருக்கும்.

மிதுன ராசி துலாம் ராசி கும்ப ராசி இந்த ராசி ஒன்றில் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள் மலை மீது இருக்கும் முருகனை வழிபட முன்னேற்றத்தை பெறுவார்கள்.

கடக ராசி விருச்சிக ராசி மீன ராசி இந்த ராசிகளில் ஏதாவது ஒன்றில் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள் கடல் முருகரை வழிபட முன்னேற்றத்தை அடைவார்கள்.

காற்று ராசி அல்லது நீர் ராசியில் நின்று ஒரு கிரகம் திசையை நடத்தினால் அவர்கள் தொலைதூர பயணம் அல்லது வெளிநாட்டு பயணம் அல்லது கப்பல் பயணம் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

விதியை மதியால் வெல்லலாம் என்பது பழமொழி அப்படி மதியால் வெல்வதும் எழுதப்பட்ட விதி தான்.

எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் எந்த ஒரு துறவி/ சாது/ மகான் /சித்தர் /கடவுள் என்று யாரையும் எதற்காகவும் திட்டவோ சபிக்கவும் கூடாது இழிவு படுத்தி பேசக்கூடாது.

 இதற்கு பரிகாரம் கிடையாது.பிராய சித்தமும் கிடையாது.

ஒருவருடைய ஜாதக ரகசியத்தை அவரது பெற்றோர்கள் அல்லது வாழ்க்கை துணையைத் தவிர வேறு எவரிடமும் எப்போதும் எதற்காகவும் சொல்லக்கூடாது.

அசைவம் சாப்பிட்டுவிட்டு

அல்லது

மது அருந்திவிட்டு அல்லது

போதை பொருட்கள் பயன்படுத்தி விட்டு எப்போதும் ஜோதிட பலன்கள் சொல்லக் கூடாது .

அவ்வாறு சொன்னால் நவகிரகங்கள் அந்த ஜோதிடருக்கு கடுமையான சாபத்தை தந்துவிடும்.

ஜோதிடத்தை கேலி செய்பவர்கள்

கடவுளை கிண்டல் செய்பவர்கள்

தெய்வ நம்பிக்கையை இழிவு படுத்துபவர்கள்

 எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்களுக்கு

ஒரே ஒரு ஜோதிட பலன் கூட சொல்லக்கூடாது.

ஒரு ஆண் குழந்தை 15 வயது ஆகும் வரை அதற்குரிய யோகம்/அவ யோகம்  அந்த குழந்தையின் அப்பா அம்மாவுக்கு முழுமையாக போய் சேரும்.

 அதன் பிறகு தான் அந்த குழந்தைக்கு கிடைக்கும்.

 ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் ருது ஆகும்  வரை அதற்குரிய யோகம் அல்லது அவ யோகம் அந்த பெண் குழந்தையின் அப்பா அல்லது அம்மாவுக்கு போய் சேரும்.

 ருதுவான பிறகு அந்தப் பெண் குழந்தைக்கு போய் சேரும்.

 குலதெய்வம் தெரியாதவர்கள்,

 மாதம் ஒருமுறை கூட குலதெய்வத்தை சென்று  வழிபாடு செய்யாமல் இருப்பவர்கள் ஏதாவது ஒரு குறையுடன் வாழ்க்கையை நடத்துவார்கள்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்றும் வளர்பிறை பஞ்சமி அன்றும் யார் அவர் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு குலதெய்வத்தின் வரம் கிடைக்கும் . அவ்வாறு வரம் கிடைக்க வேண்டும் என்றால் மேலே சொன்ன நாட்களில் உங்கள் குலதெய்வ வழக்கப்படி படையல் வைத்து 90 நிமிடங்கள் வரை பிரார்த்தனை செய்ய வேண்டும். அவ்வாறு பிரார்த்தனை செய்யும்போது நெகட்டிவாக பேசக்கூடாது நினைக்கக் கூடாது யாரையும் சபிக்க கூடாது.

மற்ற நாட்களில் குலதெய்வம் கோவிலுக்கு சென்றால் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் மட்டுமே கிடைக்கும்.

லக்கனாதிபதி வக்ரம் பற்றி இருந்தால்

 அல்லது

 ஐந்தாம் இடத்து அதிபதி வக்ரம் பெற்று இருந்தால்

அல்லது

புதன் வக்கிரம் பெற்று இருந்தால்

 அவர்கள் யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்ப மாட்டார்கள்.

போன நான்கு பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியத்தை மட்டுமே இந்த பிறவியில் அனுபவிக்க நாம் பிறவி எடுத்து இருக்கின்றோம்.

இந்த பிறவியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் பாவம் அல்லது புண்ணியத்தை நமக்கு தருகிறது அது நம்முடைய லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் பதிவாகிறது எனவே இந்த பிறவியில் நம்முடைய லக்கினத்திற்கு பத்தாம் இடம் தான் அடுத்த பிறவியில் நம்முடைய ஜென்ம லக்னமாக மாறுகிறது.

அடுத்த ஐந்தாவது பிறவியில் நமக்கு ஜென்ம லக்னநாக  இருப்பது தான் இந்த பிறவியில் உள்ள லக்னம் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசியில் இருந்து கடக ராசி வரை ஐந்து அல்லது ஐந்து கும் மேற்பட்ட கிரகங்கள் இருக்க ஒருவர் பிறந்தால் அவர் அருளை நோக்கி பிறந்த ஆத்மா!!!

சிம்ம ராசியில் இருந்து மகர ராசி வரை ஐந்து அல்லது ஐந்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருக்க பிறந்தவர்கள் பொருளை தேடிப்பிறந்த ஆத்மா!!!!

சூரியனும் புதனும் ஒரே நட்சத்திர பாதத்தில் இருக்க பிறந்தவர்களுக்கு வாழ்நாள் முழுக்க கல்வி கற்கும் யோகம் உண்டு.

 

Comments

Popular posts from this blog

60 names of years

கந்த சஷ்டி விரதம்

புதிர் புராணம்