புதிர் புராணம்

கேள்விகளுக்கு பதில. கொஞ்சம் ஆழமா படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம். முயற்சி செய்து பாருங்கள்

1. கருடாழ்வாரின் இயற்பெயர் எது

2. அக்காலத்தில் பூத புரி என்று அழைக்கப்பட்ட ஊரின் தற்போதைய பெயர் என்ன?

3.  திருநாவுக்கரசர் சமண மதத்தில் இருந்தபொழுது எவ்வாறு அழைக்கப்பட்டார்.

4. பிரதோஷ வழிபாட்டில் வழிபடக்கூடிய ஒரு வைஷ்ணவ பெருமாள் யார்?

5. மழை வேண்டி பாடக்கூடிய ராகம் எது?

6. பாஞ்சஜன்யம் என்கின்ற சங்கின் அவதாரமாக பிறந்த ஆழ்வார் யார்?

7.  மகாபாரதத்தில் உள்ள அட்சய பாத்திரம் யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டது?

8.  ராமாயணத்தில் இந்திரனின் மகனாக கருதப்படுபவர் யார்?


9.  மகாபாரதத்தில் இந்திரனின் மகனாக கருதப்படுபவர் யார்?

10. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் யாது?


11.  18 புராணங்களில் மிக அதிக சுலோகங்களை உடைய புராணம் எது?

12.  பகவத் கீதை தெரியும் ராமாயணத்தில் ராம கீதை யாருக்கு யாரால் உபதேசிக்கப்பட்டது?


13. துரோணாச்சாரியாரின் குரு யார்?

14.  சூர்ப்பனகையின் கணவனின் பெயர் யாது?


15. மகாபாரதத்தில் யார் கோதண்டம் என்கின்ற வில்லை வைத்திருந்தார்?

16. சீதாதேவியை வளர்த்த தாயாரின் பெயர் யாது?

17. ராம் ராம் என்று ஒருவரை ஒருவர் வணங்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்த மன்னர் யார்?

18. பலராமரின் மனைவியின் பெயர் யாது?


19.  பாண்டவர்களின் வெற்றிக்காக களபலி கொடுக்கப்பட்டவர் யார்?

20. ஸ்ரீ ராமானுஜரின் மனைவியின் பெயர் யாது?

21. மகாபாரதத்தில் தேவகி வசுதேவர் போல் எட்டு குழந்தைகளை பெற்ற பெற்றோர்களின் பெயர் ?

22. அம்பாளின் காதணிகளாக ஸ்ரீ சக்கரம் சிவ சக்கரம் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்தலம் எது?


23. ஸ்ரீராம லட்சுமண பரதன் சத்துருக்கனன் சகோதரி யார்

24. வாலிக்கு பயந்து சுக்ரீவன் மறைந்து வாழ்ந்து வந்த பர்வதத்தின் பெயர் யாது?

25. ராமாயணத்தில் மிமிக்ரி செய்யும் பாத்திரம் யார்?


விடைகள்

1. வைனதேயன்

2.ஸ்ரீபெரும்புதூர்

3. தருமசேனர்

4. நரசிம்மர்

5. அமிர்தவர்ஷினி

6. பொய்கையாழ்வார்

7. சூரியபகவான் தர்மருக்கு கொடுத்தது

8. வாலி

9. அர்ஜுனன்

10. நீலன்

11. கந்தபுராணம் (ஒரு லட்சம் ஸ்லோகம் உடையது)

12. ராமருக்கு வசிஸ்டரால் கூறப்பட்டது

13. அக்னிவேசர்

14.. வித்யுத்ஜின்

15. விதுரர்

16. சுனைனா

17. சத்ரபதி சிவாஜி

18. ரேவதி

19. அரவான்

20. தஞ்சமாம்பாள்

21. சந்தனு /கங்காதேவி

22. ஜம்புகேஸ்வரர் ஆலயம் திருவானைக்காவல் (அகிலாண்டேஸ்வரி)

23. சாந்தை அல்லது சாந்தா

24. ரிசியமுக பர்வதம் / ருசியமுக

25. மாரீசன்

Comments

Popular posts from this blog

60 names of years

கந்த சஷ்டி விரதம்