அட்சய திருதியை
அட்சய திருதியை பூஜை நேரம் குறித்த தகவல்கள்... அக்ஷய திருதியை... செல்வம் தரும் புனித நீராடல் முறை...
https://www.youtube.com/watch?v=VW6JZ55OkF8
https://www.youtube.com/watch?v=kDXV2FtTnv0
https://www.youtube.com/watch?v=wfzHBytY_uY
https://drive.google.com/file/d/1vvxVWpQxlffIjFxvV9PnhWmHyRliRQxY/view?usp=sharing
அட்சய திருதியை என்றால் வளர்க என்று பொருள். அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் நாம் வாங்கும் பொருட்கள் மேன்மேலும் வளரும். அன்றைய தினம் கல் உப்பு. மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் இடைக்கும். நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும். சுக்கிரன் ஆசி நிறைந்த வெள்ளிக்கிழமை அட்சய திருதியை வருவது சிறப்பானதாகும்.
பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்கியது இந்த நாளில்தான். பிரளயம் முடிந்து, வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து, சிருஷ்டி மீண்டும் துவங்க சிவ பெருமான் அருளிய தினம். திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம். அதனால்தான், இன்றைய தினத்தில் லட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பர்.
வனவாசம் சென்ற பஞ்ச பாண்டவர்கள் தவம் இருந்து சூரிய பகவானிடம் அட்சய பாத்திரம் பெற்ற தினம். பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம். இன்றைய தினத்தில் லட்சுமி பூஜை, குபேர பூஜையை செய்ய ஐஸ்வர்யம் பெருகும். இயலாதவர்கள், "ஓம் ஐஸ்வரேஸ்வராய நம:" என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர்.
பாற்கடலைக் கடைந்தபோது ரத்தினங்கள், ஐராவதம், கல்பதரு, காமதேனு, சந்திரன், மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர். இப்படி அலைமகள் அவதரித்த தினம் அட்சயதிரிதியை. பிட்சாடனரான ஈஸ்வரன், ஸ்ரீஅன்னபூரணியிடம் பிட்சை பெற்றது இந்த நாளில்தான். கௌரவ சபையில் திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் துகில் தந்து அருளியது போன்ற புராணச் சம்பவங்கள் நிகழ்ந்ததும் இந்தத் தினத்தில்தான். பரசுராமர் அவதரித்ததும் அட்சய திரிதியையில்தான். இந்த நாளில் பரசுராமர் வழிபாடு நன்மை தரும்.
சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு 3-வது நாள் அட்சய திருதியை 3-ஆம் எண்ணுக்கு அதிபதி குரு. இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பாகிறது.
அட்சய திருதியை 2022 தேதி 03.05.2022
அட்சய திருதியை 2022 நேரம் காலை 05:48 - மாலை 12 : 06
அக்ஷய திருதியை... செல்வம் தரும் புனித நீராடல் முறை...
கினி நட்சத்திரம் திருதியை வழிபாடு செய்ய, தானங்கள் செய்ய, உங்களுக்கு தெரிந்த கலையை, கல்வியை மற்றவருக்கு போதிக்க, மஹாலக்ஷ்மி அல்லது குபேர பூஜை அல்லது லட்சுமி நாராயண பூஜை மேற்கண்ட நேரத்தில் செய்ய மிக சிறப்பு.
மேலும் இந்த நாளில் புனித நீரில் நீராடுவது மிக சிறப்பான ஒன்று. முடியாதவர்கள், கையளவு கல் உப்பை நீரில் கரைத்து, கிழக்கு முகம் பார்த்து கங்கையை மனதில் தியானித்து குளிக்கலாம். அசைவம் உட்பட, தோல் பொருட்கள் தவிர்ப்பதும் மிக அவசியம். இந்நாளில், எந்த அளவு தானம் செய்கிறீர்களோ, அந்த அளவு புண்ணிய பலனும் ஆத்மார்த்த திருப்தியும் வந்து சேரும். வெயிலில் வாடுவோருக்கு , வறியோருக்கு குடை, விசிறி, செருப்பு போன்றவை தானம் செய்ய, வீடு பேறு வந்தடையும். நீர் மோர், நீர் போன்றவை தானம் தர வற்றாத வாழ்வமையும்.
அன்னம், பணம் போன்றவை தானம் செய்ய செல்வ செழிப்பு மிக்க வாழ்வமையும். மேலும், திருமண தடை அல்லது திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்து வருவோர் இந்நாளில் சுமங்கலிப்பெண்களுக்கும், பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும் தங்களால் முடிந்த புதிய ஆடை, மஞ்சள், வளையல், தாம்பூலம், மஞ்சள் லட்டு, தேங்காய் போன்றவையில் எவை முடிகிறதோ, எவ்வளவு நபருக்கு தங்கள் வசதிக்குட்பட்டு செய்ய முடியுமோ அதை தானம் செய்யலாம். முதியவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்வது மிக பெரும் நல்வாழ்வு அமைய வைக்கும். விரும்பிய தெய்வ உருவ படங்கள், பொருட்கள் வைத்து வழிபாட்டினை செய்வதும் சிறப்பு தரும்.
வீட்டில் செய்ய வேண்டிய பூஜை
இந்த நாளில் நாம் கட்டாயம் செய்ய வேண்டியது - இறைவழிபாடு அவசியம். அட்சய திருதியை நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, கலசம் வைத்துப் பூஜை செய்யும் வழக்கம் உடையவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
பூஜை அறையை அலங்கரித்து, ஒரு மனைப்பலகையில் வாழையிலை இட்டு, அதில் பச்சரிசியைப் பரப்பி, கலசம் வைக்க வேண்டும். அருகே ஒரு பாத்திரத்தில் நெல் இருந்தால் நிறைத்து வையுங்கள். ஶ்ரீலட்சுமி நாராயணர் படம் அல்லது திருப்பதி ஏழுமலையானின் படம் இருந்தால், அதையும் பிரதானமாக வைத்து மலர் சாத்தி சந்தனம் குங்குமம் இட்டு வையுங்கள். பிறகு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து, நீங்கள் அன்று சிறிதளவேனும் அரிசி, உப்பு, குண்டு மஞ்சள், பருப்பு முதலியவற்றை வாங்கிக் கலசத்தின் முன்பாக வைத்து வணங்க வேண்டும்.
பிறகு கையில் அட்சதை எடுத்துக்கொண்டு ஒரு மலரையும் அதோடு சேர்த்துக் கைகூப்பி அன்னை மகாலட்சுமி அந்தக் கலசத்தில் எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு அட்சதையையும் மலரையும் கலசத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு இஷ்டதெய்வம், குல தெய்வம் ஆகியோரையும் வணங்கி தூப தீப ஆராதனை செய்யவேண்டும். அன்னை மகாலட்சுமியைப் போற்றும் 108 போற்றிகளையோ அஷ்டோத்திரமோ சொல்லி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இன்று பால் பாயாசம் செய்து நிவேதனம் செய்வது சிறப்பு. நிவேதனத்துக்குப் பின் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்யலாம்.
கலச பூஜை செய்யும் வழக்கம் இல்லாதவர்கள் வெண்ணிற மலர்களையும் மஞ்சள் நிற மலர்களையும் வாங்கி சுவாமி படத்துக்குச் சாத்தி வழிபடலாம். அர்ச்சனை, போற்றிகளைச் சொல்லி வழிபடுவதும் சிறப்பு.
அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்?
மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம். அதேவேளை இந்த நாளில் வாங்கும் பொருள்கள் பல்கிப் பெருகும் என்பதால் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்கள் வாங்குவதும் நல்லது.
தங்கம் வாங்க உகந்த நேரம்:
இந்த வருடம் 03.5.22 செவ்வாய்க்கிழமை அட்சய திருதியை. இந்த நாள் முழுவதுமே தங்கம் வாங்குவது சிறப்பு என்றாலும் சில நேரங்கள் மிகுந்த பலன் தரும்.
இந்த நாளில் காலை 11 முதல் 12 வரை சனி ஹோரையில் தங்கம் வாங்க, அது நிலைத்து இருக்கும். பகல் 12 முதல் 1.30 மணி வரை குருஹோரை, இந்த நேரத்தில் வாங்கினாலும் தங்கம் மென்மேலும் பெருகும்.
மாலை 5 முதல் 6 மணி வரை சுக்கிர ஹோரையிலும் மாலை 7 முதல் 8 மணி வரை குரு ஹோரையிலும் வாங்கினால் நம்மிடம் தங்கம் நம்மோடு தங்கியும் இருக்கும்.

Comments
Post a Comment