Posts

நிலை வாசல் அறுகம்புல்

Image
https://www.youtube.com/watch?v=8prpKMCfTII https://bhakthiplanet.com/2017/08/vinayagar-sathurthi-festival/ நிலை வாசலில் அறுகம்புல்லை இப்படி வைத்தால், உங்கள் வீட்டிற்குள் எந்த ஒரு கெட்டதும் காலடி எடுத்து வைக்கவே பயந்து நடுங்கும். மனித ரூபத்தில் இருக்கும் கெடுதல் கூட வீட்டிற்குள் நுழையாது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரிந்த மனிதர்கள் முதல் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகள் வரை எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து ஆக வேண்டி இருக்கின்றது. அதாவது நம்முடைய வீட்டிற்குள் நுழைய கூடிய சில கெட்ட சக்திகளால் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு கட்டாயம் பிரச்சனை ஏற்படும். எடுத்துக்காட்டிற்கு சில மனிதர்கள் நம்முடைய வீட்டிற்கு வந்து சென்றாலே அது குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்கிவிடும். அது நமக்கே நன்றாக தெரியும். நம்முடைய வீட்டிற்கு அவர்களை வரவேண்டாம் என்று நம்மால் சொல்லவும் முடியாது. ரொம்பவும் நெருங்கிய சொந்தங்கள் ஆக, நண்பர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் வந்தால் நம் வீட்டில் கட்டாயம் ஒரு பிரச்சனை நடப்பது உறுதி. இன்னும் சில பேர் வீடுகளில், சில பேர் வந்து ஏதாவது ஒரு பொருளை வீட்டிலிருந்து நமக்கே த...

தில ஹோமம்

 தில ஹோமம். https://www.youtube.com/watch?v=bZtsYFGqHD0 https://www.youtube.com/watch?v=mpVyNvY0-_Y https://www.youtube.com/watch?v=zaYPEWE9uwE https://www.youtube.com/watch?v=Xrw0S5lpU_E பித்ரு தோஷத்தால் ஏற்படும் குழந்தையின்மை, அல்லது குழந்தை உருவாகாது இருத்தல், கர்ப்பம் தங்காது இருத்தல், பிறந்த குழந்தை இறந்து போதல் போன்ற தோஷங்கள் ஏற்படலாம், இப்படிப்பட்ட தோஷங்களைப் போக்கவும் தில ஹோமம் செய்யப்பட வேண்டும். மற்ற ஹோமங்களைப் போலல்லாமல் மறைந்தவர்களுக்கு சம்ஸ்காரம் செய்வதைப்போல் இறந்தவர்களை வெள்ளியாலான பிரதமையில் ப்ரேத ஸ்வரூபியாக ஆவாஹனம் செய்து, செய்யப்பட வேண்டிய இந்த தில ஹோமத்தை, தாங்கள் வசிக்கும் வீட்டில் செய்வதில்லை, ராமேஸ்வரம், திருவெண்காடு, ஸ்ரீவாஞ்சியம், பவானி, ஸ்ரீரங்கபட்டினம் போன்ற பொதுவான இடங்களில் செய்யவேண்டும். ஹோமத்தின் இறுதியில், இறந்த முன்னோர்களை பிரேத ஸ்வரூபத்திலிருந்து விடுபட்டு பித்ருக்களுடன் ஒன்றாக சேர்ப்பிக்கும் விதமாக பித்ரு பிரதமைகளை சமுத்திரத்திலோ அல்லது கடலில் கலக்கும் புண்ணிய நதிகளிலோ கரைத்துவிட்டு ஸ்னானம் செய்ய வேண்டும், இதனால் பித்ரு தோஷம் விலகி, குழந்தைகள்...

பாவங்களில் இருந்து விமோச்சனம் தரும் 'பாப மோசனி' ஏகாதசி ...

https://www.youtube.com/watch?v=8trsepDdBbI அனைத்து பாவங்களையும் போக்கும் பாவ விமோசனி ஏகாதசி! ஏகாதசி விரதமிருப்பவர்கள், பகவான் ஸ்ரீ விஷ்னுவை தரிசிப்பவர்கள், புனிதமான ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி மோட்சத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை. பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம் என்கிறோம். கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை), சுக்லபக்ஷம் (வளர்பிறை) ஆகிய இந்த இரண்டு பக்ஷங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும். ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். வானியல் விளக்கம்: சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூர...

உணவு வழித் தோசங்கள்

 https://www.youtube.com/watch?v=V0X0i1ApaHE&t=520s உணவு வழித் தோசங்கள் இந்து சமயத்தவரின் வாழ்க்கை முறையில் உணவை எப்படி எங்கே யார் மூலம் செய்யப்பட்டு, பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.  அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படிச் சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான். உணவில் ஐந்து தோசங்கள் உண்டு. 1. அர்த்த தோசம் 2. நிமித்த தோசம் 3. ஸ்தான தோசம் 4. ஜாதி தோசம் 5. சம்ஸ்கார தோசம்  1. அர்த்த தோசம்  பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார்.  உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றைச் சீடரிடம் தந்ததைப் பார்த்தார்.  உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது.  சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.  மறுநாள் காலையில், பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா என்ன தவறு செய்து விட்டோம் இந்தத் தவறை நா...

பூச்சொரிதல்

Image
பூச்சொரிதல் ஸ்பெஷல் ! 🍁🌸🍁🌸🍁🌸🍁🌸🍁 மாரியம்மன் சுப்ரபாதம் ! 🌿🌻🌿🌻🌿🌻🌿🌻🌿 சமயபுரம் கண்ட சத்திய ஜோதியாம் மகமாயி !  சகல நன்மைகளின் அருட்சுடர் நாயகியே ! முழுமதியாக எங்குமே தவழ்ந்து நீயும்  முல்லை மணமாக எங்கள் வாழ்வு ஆகிட நீயும்  பள்ளி எழுந்தருள்வாய் ! தாயே ஸ்ரீ சமயபுரம் மகமாயி ! 🌈🌷🌈🌷🌈🌷🌈🌷🌈 தேவி பாத கமலம் சரணம் ! ➖➖➖➖➖➖➖➖➖ 🪴🌟🪴🌟🪴🌟🪴🌟🪴 புஷ்பாஞ்சலி ! 1. ரோஜாப்பூ கொண்டு வந்தே எங்கள் ராஜேஸ்வரியே பூஜை செய்தால் தேசாதி தேசம் மெச்சும் ஒரு ராஜாப்போல வாழச் செய்வாள் 2. முல்லைப்பூ கொண்டு வந்தே எங்கள் மோகனாங்கியை பூஜை செய்தால் இல்லை என்று சொல்லாமலே அவள் அள்ளி அள்ளி அளித்திடுவாள் 3. மருக்கொழுந்து கொண்டு வந்தே எங்கள் மனோன் மணியை பூஜை செய்தால் திருக்கோலம் கொண்டு அங்கே அவள் தினந்தோறும் வந்திடுவாள் 4. ஜாதிப்பூ கொண்டு வந்தே எங்கள் ஜோதி அவளை பூஜை செய்தால் ஓதி உணரா வித்தையெல்லாம் தந்து மேதை என்றாக்கி விடுவாள் 5. மகிழம்பூ கொண்டு வந்தே எங்கள் மாதங்கியை பூஜை செய்தால் மணமாகாத கன்னியர்க்கு திருமணம் அவள் நடத்தி வைப்பாள். 6. தாழம்பூ கொண்டு வந்தே எங்கள் தாட்சாயணியை பூஜை செய்தால் ...

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம் 🌹🌿திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம் 🌹 🌿 வாரணம் ஆயிரம் பதிகம் நல்ல திருமணப் பேற்றினை அளிக்கிறது. இப்பாடல் சூடிக்கொடுத்த சுடர் கொடி என்னும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப் பெற்றது. 🌹 🌿 திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் நூல்கள் ஆண்டாளால் இயற்றப்பட்டு இன்றும் அவரது புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. 🌹 🌿 கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் வாரணம் ஆயிரம் பதிகம் பாடி நல்வாழ்க்கையோடு நன்மக்கட்பேறையும் பெறலாம். 🌹 🌿 இப்பதிகத்தின் முதல் பாடல் மாப்பிளை அழைப்பு பற்றியும் 🌹 🌿 இரண்டாவது பாடல் நிச்சயதார்த்தம் பற்றியும் 🌹 🌿 மூன்றாம் பாடல் பெரியோர்களின் அனுமதி பற்றியும் 🌹 🌿 நான்காம் பாடல் காப்பு கட்டுதல் பற்றியும் 🌹 🌿 ஐந்தாம் பாடல் மணம் முடிக்க மணமகனாக‌ பெருமாள் வந்த நிலை பற்றியும் 🌹 🌿 ஆறாம் பாடல் திருமணம் முடித்து கைபிடித்தல் பற்றியும் 🌹 🌿 ஏழாம் பாடல் அக்னியை வலம் வருதல் பற்றியும் 🌹 🌿 எட்டாம் பாடல் அம்மி மிதித்தல் பற்றியும் 🌹 🌿 ஒன்பதாம் பாடல் பொரியிடுதல் பற்றியும் 🌹 🌿 பத்தாம் பாடல் மணமக்கள் ஊர்வலம் பற்றியும் 🌹 🌿 பதினொன்றாம் பாடல் இப்பதிகத்தினைப்...

காரடையான் நோன்பு

 https://www.youtube.com/watch?v=QHpzcj_3K2E https://www.youtube.com/watch?v=gzQwAhgZ39c https://youtu.be/xuI5hqm1W9w சூரிய உதயம் மார்ச் 14, 2022 6:40 AM சூரிய அஸ்தமனம் மார்ச்  14, 2022 6:31 PM காரடையான் நோன்பு தேதி, நேரம் மார்ச்  14, 6:40 AM - மார்ச்  15, 12:21 AM மஞ்சள் சரடு முகூர்த்தம் மார்ச் 15, 2022 12:21 AM காரடையான் நோன்பு: கணவன் ஆயுள் அதிகரிக்க மகத்தான விரதம் - சத்தியவானின் உயிரை சாவித்திரி எப்படி மீட்டார் காரடையான் நோன்பு நேரம்: சத்தியவானின் உயிரை எமனிடமிருந்து மீட்ட சாவித்திரியை நினைத்து பெண்கள் மேற்கொள்ளும் மிகவும் மகத்தான விரதம் தான் காரடையான் நோன்பு. திருமணமான பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க வேண்டும் என்றும், திருமணம் ஆகாத இளம் பெண்கள் நல்ல கணவன் அமைய வேண்டும் என சாவித்திரியை நினைத்து விரதமிருக்கின்றனர். காரடையான் நோன்பு  சத்யவானின் உயிரை எமனிடம் இருந்து மீட்ட சாவித்திரியை நினைத்து அனுஷ்டிக்கப்படும் விரதமாகும் இந்த விரதம் தன் கணவன் தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக திருமணமான பெண்கள் விரதம் இருப்பது வழக்கம். சத்தியவானை மீட்ட சாவித்திரியின் க...