Posts

மகாலக்ஷ்மி

ஸ்ரீ மஹாலஷ்மி தோன்றிய கதை ! ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மியின் கதையை படிப்பவர்களுக்கு வீடுகளில் லஷ்மி கடாஷம் நிரந்தரமாகும். மும்மூர்த்திகளில் ஒருவரான  மஹா விஷ்ணுவின் துணைவியாக இருக்கும் செல்வத்திற்கான கடவுள் மஹாலட்சுமி எப்படி தோன்றினாள். லட்சுமி தேவியை மஹாவிஷ்ணு மணந்த புராண கதை. முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும், மனிதர்களைப் போல நரை, திரை, பிறப்பு இறப்பு, ஆகியவை இருந்திருகின்றன. இதிலிருந்து தேவர்கள் விடுபட வேண்டும் என நினைத்தார்கள்.  தேவர்களின் தலைவராகிய இந்திரன் அதிலிருந்து விடுபட வேண்டி ப்ரம்மனிடம் சிவபெருமானிடமும் முறையிட்டனர்.  ஆனால் அவர்களோ மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டால் அதற்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார். *பாற்கடல் கடைதல்* ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் முறையிட்ட போது, கவலைப் பட வேண்டாம்.  இந்த பாற்கடலில் அமிர்தம் இருக்கின்றது.  நாம் இந்த பாற்கடைலை கடைந்தால் அதைப் பெற முடியும் என்றார்.  அந்த அமிர்தத்தை அருந்தினால் நாம் நரை, திரை, பிறப்பு இறப்பு, ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும். இதையடுத்து ஆலோசனை நடந்தது.  தேவர்கள் மட்டும் பாற்கடல...

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

 புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே !  இது கவியரசர் எழுதிய ஒரு அற்புதமான பக்திப் பாடல் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!  இந்தப் பாடலுக்கான ஒரு விளக்க உரையாக எனக்கு வாட்ஸாப்பில் வந்த ஒரு கட்டுரையை நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.   இப்படி ஒரு அற்புதமான விளக்கவுரை தந்திருக்கும் அந்தப் பெயர் தெரியாத நண்பருக்கு எனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.     உண்மையிலேயே ஒரு அற்புதமான விளக்கத்தை அவர்  கொடுத்திருக்கிறார்.  "கவியரசர் கண்ணதாசன் இயற்றி, அமரர் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்ற பாடலை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. மெல்லிசை மன்னர் இசையமைத்த, இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. இந்தப்பாடலைக் கவியரசர் அமைத்திருக்கும் முறையை சற்று ஆராய்ந்தால் பல சுவாரஸ்யமான தகவல்கள், கதைகள் நமக்கு கிடைக்கும். நாம் சர்வசாதாரணமாக கேட்டுக்கொண்டே கடக்கும் ஒரு பாடலுக்குள் எத்தனை எத்தனை விஷயங்கள். எங்கும் அவநம்பிக்கைகளும், அச்சங்களும், எதிர்மறை எண்ணங்களும் சூழ்ந்திருக்கும் ஒரு சூழலில் இறைவனின் அருள்தன்ம...

காளிகாம்பாள், சென்னை

அன்னை காளிகாம்பாள் கோயில் பற்றி சில தகவல்கள். 1.காளிகாம்பாள் ஆலயம் மிகப் பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது. 2. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும். 3. தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது. 4. சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சகம் கிடைக்கும் என்பார்கள். அது போல பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும். 5. காளிகாம்பாள் கோவிலுக்கு செல்லும் போது அவசரப்பட்டு வழிபாடுகளை செய்யாதீர்கள். ராஜகோபுரம், நடராஜ மண்டபம், காயத்ரி மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நின்று நிதானமாக ரசித்து பார்த்து வரலாம். 6. காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 7. காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன...

தீபலக்ஷ்மி Dheepalakshmi

தீப லட்சுமியை துதிப்போம். தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:  தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன். 2. சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத:  சத்ரு புத்தி வினாசாய தீபஜோதி நமோஸ்துதே எல்லா சுபகாரியங்களும் தடையின்றி நடக்கவும், எதிரிபயம் விலகவும் உடல்நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும் அருள்புரியும் தீபலட்சுமியே… எங்கள் அறிவாற்றல் இருள் இன்றிப் பிரகாசிக்கவும் அருள்செய்யும் உன்னைத் துதிக்கிறேன். 3. ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ  ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ  கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ  விபூதி வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ எவரால் தினமும் தீபம் ஏற்றப்படுகிறதோ அவரது இல்லத்தில், பொன், பொருள் சேரும். தானியங்கள் குறைவிலாது பெருகும்; அன்னப் பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். சகல ...

நட்சத்திரங்கள் 27

Image
Please revisit for updates. https://youtu.be/uBsOujnGMoQ   27 நட்சத்திரங்கள்... ஏ டூ இஸட் தகவல்கள்! 2 - புதிய தொடர் :  அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் குணங்கள் வணக்கம். இப்போது நட்சத்திரங்களின் தனித்தன்மையைப் பார்ப்போம். முதலில் நாம் பார்க்கப்போவது அஸ்வினி நட்சத்திரம்.27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம். ஏன் அஸ்வினி நட்சத்திரம் முதல் நட்சத்திரமாக இருக்கிறது? இந்தக் கேள்வி பலருக்கும் வரலாம். இதற்குக் காரணம் உண்டு. ஒவ்வொரு குழந்தையும் போது கிராமத்து மருத்துவச்சி முதல் நகரங்களில் உள்ள மருத்துவர் வரை அவர்களின் உதவியோடுதான் பிறக்கிறது. அதுமட்டுமல்ல தாய் மற்றும் குழந்தை என்னும் இரட்டை உயிர்களை பிரித்தெடுப்பதுதான் பிரசவம். இந்த இரட்டை உயிர் அம்சம்தான் அஸ்வினி குமாரர்கள். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை - அஸ்வினி குமாரார்கள். இவர்கள் இரட்டையர்கள். தேவ மருத்துவர்கள். இவர்கள் இரட்டையர்களாக அழைக்கும் போதுதான் அஸ்வினி குமாரர்கள், இவர்களின் தனிப்பெயர்... ஒருவர் நாசத்யா. மற்றொருவர் தஸ்ரா. உருவம் - குதிரை முகம். பாண்டவர்களில் நகுலனும் சகாதேவனும் இந்த அஸ்வினி குமாரர்களுக்குப் பிறந்தவர்கள். இ...

ஆதீனம்

 ஆதீனம் என்பதும் மடங்கள் என்பதும் ஒன்றல்ல. ஆதீனங்கள் வேறு மடங்கள் வேறு. ஆதீனம் என்பது பல சொத்துகளும், பல கோயில்களை கொண்டுள்ளவை. அது ஒரு பெரிய சமஸ்தானம் போன்றது - தனி அரசாங்கம் போன்றது. https://www.youtube.com/watch?v=7r-ZY7d3JPk https://www.youtube.com/watch?v=dJGIUEZYSmA 1. தருமபுர ஆதீனம், 2. திருவாவடுதுறை ஆதீனம், 3.மதுரை ஆதீனம், 4. வேளாக்குறிச்சி ஆதீனம், 5. நாச்சியார் கோயில் ஆதீனம், 6. ராமேஸ்வரம் ஆதீனம், 7.திருப்பனந்தால் ஆதினம், 8.குன்றக்குடி ஆதீனம், 9. தொண்டைமண்டல ஆதினம், 10 சிம்போள ஆதீனம், 11.துலாவூர் ஆதீனம், 12. நீலப்பாடி ஆதீனம், 13. செங்கோல ஆதீனம் 14. சூரியனார் கோயில் ஆதீனம், 15.தாயுமானவர் ஆதீனம், 16. தரணி ஆதினம், 17. சுர்க்கபுர ஆதீனம் 18. ஆகம சிவபிரகாச அதீனம் அத்தனை ஆதீனங்களுக்கும் குருவாக இருப்பவர்கள் சைவ வேளாளர்கள் மாத்திரமே. இதில் மதுரை ஆதீனம் திருஞான சம்பதருக்கு முன்பே இருந்துள்ளது. சம்பந்தர் யாரை அங்கே அமர்த்தினார் ? அத்தனை ஆதீனங்களையும் நிர்வகிப்பது வேளாளர்கள் மாத்திரமே. வேளாளர்களில் பல பிரிவுகள் இருந்தும் ஆன்மீக பிரிவாக இருப்பது ""சைவ வேளாளர்"" மாத்திர...